குடிபோதை தகராறில் மூவருக்கு அடி, உதை

புழல்: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்குட்பட்ட எல்லையம்மன்பேட்டை கிராமத்தில் கோழி தீவன குடோன் உள்ளது. இதனருகே அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர்(32), தமிழ்ச்செல்வன்(29), சம்பத்(25) ஆகியோர் கும்பலாக அடிக்கடி  மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் அங்கு மது அருந்தினர்.  இதைப் பார்த்த அந்த  குடோனில் வேலை செய்பவர்கள்,  `ஏன் இங்கு வந்து மது அருந்துகிறீர்கள்’ என்று கேட்டுள்ளனர். இதனால் குடித்து கொண்டிருந்தவர்கள் ஆத்திரமடைந்து, `எப்படி எங்களை கேட்கலாம்’ என்று  குடோன் ஊழியர்களான விக்னேஷ்(29), ஜெகதீஸ்(29), ராஜேஷ்(21) ஆகியோரை அங்கிருந்த  உருட்டுக்கட்டையை எடுத்து அடித்து உதைத்து தாக்கினர். இதில் மூவரும் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த  செங்குன்றம் போலீசார் தாக்கிய ராஜசேகர், தமிழ்ச்செல்வன், சம்பத் ஆகியோரை  காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>