×

மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி

பூந்தமல்லி: போரூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து(52). இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் இவரது வீட்டின் மேல் போடப்பட்டிருந்த பேனர் பறந்து வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் விழுந்தது. இதனை குச்சியை கொண்டு முத்து எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி அவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் போலீசார் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், முத்து மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதோ காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் முனுசாமி(45). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு பலத்த காற்று மற்றும் மழை பெய்தது. இதனால் மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக கீழே  இறங்கினார். அப்போது, தவறி விழுந்ததில் தலையில்  படுகாயமடைந்தார். உறவினர்கள் மீட்டு பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.Tags : Driver, killed
× RELATED வடசென்னை அனல்மின் நிலைய டிரைவர் வெட்டிக்கொலை