×

பூதூர் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி வாலிபர் பலி

புழல்: பூதூர் ஏரியில் குளித்த வாலிபர் சேற்றில் சிக்கி பரிதாபமாக பலியானார்.  செங்குன்றம் அடுத்த தீர்த்தம்கரையம்பட்டு சேரன் தெருவை சேர்ந்தவர்  ராகுல்(21).  இவரது நண்பர்கள் 5 பேருடன் சோழவரம் அடுத்த பூதூர் ஏரிக்கு நேற்று முன்தினம் மாலை  சென்றனர்.   அங்கு மணல் எடுத்த பள்ளத்தில் தேங்கிய தண்ணீர் இருந்தது. அதில்  குளிக்கச் சென்றனர். அப்போது,  அங்கு இருந்த சேற்றில் ராகுல் சிக்கி போராடினார். இதனை கண்டு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெகு நேரம் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதனால் அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.


உடனே அவருடன்  இருந்த நண்பர்கள் சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.Tags : Puthur Lake , Puthur Lake, Valipar, Pali
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...