லாரியில் திடீர் தீ

ஆவடி: அம்பத்தூர் அத்திப்பட்டு குப்பம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவர், பொன்னேரி அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான லாரியில் லோடுமேனாக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் லாரி பழுதாகி நின்றுவிட்டது. இதனையடுத்து, அந்த லாரியை செல்வம் மீட்டு, தனது வீட்டருகே நிறுத்திவைத்திருந்தார். பின்னர், நேற்று அதிகாலை லாரி திடீரென தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் அரைமணி நேரம் போராடி லாரியில் பற்றிய தீயை தண்ணீர்பீச்சி அடித்து அணைத்தனர்.

Related Stories:

>