முதல்வர் யோகிக்கு விவசாயிகள் சவால்: இனி டெல்லிக்கு அல்ல...உத்தரபிரதேசத்துக்கு குறி

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, கடந்த 8 மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாஜவுக்கு நெருக்கடி தரும் வகையில், விவசாயிகள் இனி டெல்லி போராட்டத்தை, உத்தரபிரதேசத்தை குறிவைத்து நகர்த்தப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல்வேறு விவசாய அமைப்பு தலைவர்களான ராகேஷ் டிக்கைட், யோகேந்திர யாதவ், ஷிவ்குமார் கக்கா ஆகியோர் கூறுகையில், ‘‘விவசாயிகளின் போராட்டத்தை விரைவில் தேர்தல் நடக்க உள்ள  மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ‘மிஷன் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட்’ என தொடங்குகிறோம். உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் செப்டம்பர் 5க்கு பிறகு விவசாயிகளால் சீல் வைக்கப்படும். லக்னோ டெல்லியாக மாறும்’’ என்றார். இதன் மூலம் உபி முதல்வர் யோகிக்கு விவசாயிகள் சவால் விடுத்துள்ளனர்.

Related Stories:

>