காரில் கட்டி நாயை இழுத்துச் சென்ற வாலிபர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கடந்த வருடம் ஒருவர் தனது வளர்ப்பு நாயை காரில் கட்டி இழுத்து சென்றார். இது தொடர்பான புகாரில் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கோட்டயம் அருகே அயர்க்குன்னம் பகுதியில் நேற்று முன்தினம் சாலையில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரின் பின்னால் ஒரு நாயை கட்டி இழுத்து செல்லப்படுவதை அந்த பகுதியினர் பார்த்தனர். இதுகுறித்து அயர்க்குன்னம் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி சென்றது கோட்டயம் அருகே லாக்காட்டூர் பகுதியை சேர்ந்த ஜெகுதாமஸ் (22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். தன்னுடைய வீட்டினர் இரவில் நாயை காரின் பின்புறம் கட்டி இருந்தது தெரியாமல் தான் காரை எடுத்து சென்றதாக ஜெகுதாமஸ் கூறி உள்ளார்.

Related Stories:

>