2024ம் ஆண்டுக்கு முன்பாக மக்களவை எம்பிக்கள் 1000 ஆக்க பாஜ திட்டம்: காங். மூத்த தலைவர் திவாரி தகவல்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘எனது நாடாளுமன்ற சக பாஜ எம்பிக்கள் மூலம் கிடைத்த தகவலின்படி, வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்க உள்ளதாக தெரிகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஆயிரம் எம்பிக்கள் அமரும் வகையில் மக்களவை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் எண்ணிக்கை 2 ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர்கள் சேர்த்து 545 ஆக உள்ளது. தற்போது, 1,000 எண்ணிக்கையில் எம்பிக்களை உயர்த்துவது குறித்து, ஒன்றிய அரசின் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட, அதுதொடர்பாக தகவல்கள் வெளியே வந்த வண்ணம் உள்ளன.

Related Stories:

>