×

ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் முடக்கம்

சென்னை: இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. தனி ஒருவன், ஆம்பள, இன்று நேற்று நாளை, கவண் உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவர் மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவரது யூ டியூப் சேனலை 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் திடீரென இவரது சேனல் நேற்று முடக்கப்பட்டது. அதில் இருந்த ஆதியின் சினிமா பாடல்கள், தனி இசை ஆல்பங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டிருந்தன.


Tags : YouTube , HipHop Adi
× RELATED `யூடியூப்பில் ஆபாச பேச்சு’ : டிக்டாக்...