வாள் வீச்சில் பவானி தேவி தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு சேபர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தோல்வியடைந்தார். ஒலிம்பிக்கில் மகளிர் வாள் வீச்சு சேபர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் டுனிசியா வீராங்கனை பென் அசீஸை 15-3 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வீழ்த்தி, இந்திய வீராங்கனை பவானி தேவி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று காலை நடந்த 2வது சுற்றுப் போட்டியில் பவானி தேவியும், வாள் வீச்சில் உலக தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை மானென் புருனெட்டும் மோதினர். தர வரிசையில் பவானி தேவி, தற்போது 36வது இடத்தில் உள்ளார்.

இந்த போட்டியில் துவக்கம் முதலே, புருனெட்டை எதிர்கொள்ள முடியாமல் பவானி தடுமாறினார்.  துவக்கத்தில் 2-8 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய புருனெட், இறுதியில் 15-7 என்ற புள்ளி கணக்கில் பவானி தேவியை வீழ்த்தி, இப்போட்டியில் வெற்றி பெற்றார்.

Related Stories:

>