மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை: பிரதமரை சந்தித்த பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக பேட்டி..!

டெல்லி: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் பேட்டியளித்தார். தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தியுள்ளோம் எனவும் கூறினார். டெல்லியில் பிரதமரை ஓபிஎஸ் உடன் சென்று சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் பிரதமர் மோடியை இருவரும் சந்தித்துப்பேசினர்.

இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ அதிமுகவில் எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை. சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம்.  தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினோம்” என்றார்.

Related Stories:

>