பள்ளி மாணவிகளை மிரட்டி பலாத்காரம்: சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். திருவனந்தபுரம் அருகே பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து பேசி உள்ளார். தொடர்ந்து வீடியோ காலிலும் பேசி நல்ல நண்பன் போல் காட்டி இருக்கிறார். இதற்கிடையே ஒரு நாள் சிறுமியை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துள்ளார். அப்போது மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அது குறித்து மகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கல்லம்பலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து 17 வயது சிறுவனை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் கோட்டயத்தை சேர்ந்த ஷைன் (20), ஜோபின் (19) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 3 பேரும் சேர்ந்து இது போல் பல மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவியின் நிர்வாண படம்

பாலக்காடு அருகே கோட்டப்பாடம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (28). அவருக்கு காட்டாக்கடையை சேர்ந்த ஒரு மாணவியுடன் சமூக இணையதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அடிக்கடி வீடியோ காலிலும் பேசி வந்தார். அப்போது காதலிப்பது போல் நடித்து மாணவியிடம் நிர்வாண படங்களை அனுப்பும்படி கூறியுள்ளார். மாணவியும் படத்தை அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோக்களை ரமேஷ் ஷேர் சாட் மூலம் பலருக்கும் பகிர்ந்துள்ளார். இந்த விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் காட்டாக்கடை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

Related Stories:

>