×

ரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்!: பார்வையாளர்களை கவர்ந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு..!!

மாஸ்கோ: ரஷ்யாவில் கடற்படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. கப்பல்படை தொடங்கப்பட்டதன் 325வது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் ரஷ்யாவில் களைகட்டின. கடற்படை தினத்தை முன்னிட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பின்லாந்து வளைகுடா பகுதியில் போர் கப்பல்கள், கண்காணிப்பு கப்பல்கள், நீர் மூழ்கிகள் மற்றும் கடற்படை விமானங்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. நடுக்கடலில் நடைபெற்ற அணிவகுப்பினை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டார்.

பின்னர் கடற்படை நாள் அணிவகுப்பில் உரையாற்றிய புதின், நீருக்கு கீழும், மேல்பகுதியிலும், வான் வழியிலும் எதிரிகளை கண்டறியக்கூடிய திறன் தங்களிடம் இருப்பதாக கூறினார். எதிரிகள் எல்லை தாண்டும் போது அவர்களை மறித்து, அவர்கள் தடுக்கவே முடியாத வகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று புதின் எச்சரித்தார். ரஷ்ய கடற்படை தின கொண்டாட்ட அணிவகுப்பில் 40 போர் கப்பல்கள், 45 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய மெய்சிலிர்க்க வைக்கும் சாகசங்களை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.


Tags : Russia ,325th Naval Day Celebration , Russia, Navy Day, warships, submarines
× RELATED ரஷ்யாவில் பல்கலை.யில் மாணவர் ஒருவர்...