×

உலக நாடுகளை திணறடிக்கும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு: 41.74 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.74 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 41,74,555 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 19,47,93,206 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,67,44,824 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 84,380 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.47 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,47,96,457பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,67,46,538 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 லட்சத்து 74 ஆயிரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,38,75,275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 84,442  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags : Corona , Corona plagues the world: number of victims rises to 19.47 crore: 41.74 lakh deaths
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 4,767,805 பேர் பலி