துப்பாக்கி மக்கரால் பேஜாரான பேக்கர்!

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதிச் சுற்றில், இந்தியாவின் பதக்க நம்பிக்கையான மானு பேக்கர் நேற்று களமிறங்கினார். எதிர்பாராத வகையில் அவரது துப்பாக்கி திடீரென பழுதடைந்ததால் அதை ரிப்பேர் செய்வதற்காக சுமார் 20 நிமிடங்கள் வீணானது. இதனால் மானு பேக்கர் 55 நிமிடத்தில் 44 ஷாட்கள் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பதற்றத்துடன் செயல்பட்ட அவரால் 575 புள்ளிகள் மட்டுமே பெற்று 12வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால், இப்பிரிவில் மானுவின் பதக்க கனவு துரதிர்ஷ்டவசமாக கலைந்து போனது. சீனாவின் ஜியான் ரான்ஜின் 587 புள்ளிளுடன் உலக சாதனையை சமன் செய்து முதலிடம் பிடித்தார். உக்ரைனின் ஒலெனா, பிரான்சின் செலின் இருவரும் தலா 577 புள்ளிகளுடன் 7வது மற்றும் 8வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். இவர்களுக்கும் மானுவும் 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாகி மட்டும் மக்கர் செய்யாமல் இருந்திருந்தால் மானு பேக்கர் (19 வயது) நிச்சயம் பைனலுக்கு தகுதி பெற்றிருப்பார் என்பதுடன் பதக்கத்தையும் முத்தமிட்டிருப்பார்.

Related Stories: