காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மேரி கோம்

மகளிர் குத்துச்சண்டை பிளை வெயிட் 51 கிலோ எடை பிரிவில், கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மேரி கோம் தகுதி பெற்றார். 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாதனையாளரான மேரி கோம் (38 வயது), தனது தொடக்க சுற்றில் டொமினிகன் குடியரசு வீராங்கனை மிகுவலினா ஹெர்னாண்டஸ் கார்சியாவுடன் நேற்று மோதினார். தொடக்கத்தில் இருந்து இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் மேரி கோம் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 2012 லண்டன் ஒலிம்பிக்சில் வெண்கலப் பதக்கம் வென்ற கோம், இம்முறை டோக்கியோவில் தங்கப் பதக்கத்தை முத்தமிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories:

>