கொரோனா குறித்து சர்ச்சை பதிவு மக்களிடம் டோஸ் வாங்கிய சுகாதாரத் துறை அமைச்சர்

லண்டன்:  இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், தினசரி புதிதாக தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை 30,000-க்கும் மேல் உள்ளது. தற்போது, அந்நாட்டில் கட்டுப்பாடுகள் முழுமையாக திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் சாஜித் ஜாவித் (51) கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி குணமடைந்தார். இது குறித்து அவர் டிவிட்டரில், ‘கொரோனாவில் இருந்து நான் முழுமையாக குணமடைந்து விட்டேன். வைரசுக்கு பயந்து மக்கள் இனிமேல் பயந்து ஓடக் கூடாது. மாறாக, அதனுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள்,’ என பதிவிட்டு இருந்தார். ‘மக்கள் இனிமேல் பயந்து ஓடக் கூடாது,’ என என்ற வார்த்தைக்கு பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, அவர் தனது டிவிட்டரில் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி, தனது பதிவையும் உடனடியாக நீக்கினார்.

Related Stories: