சொல்லிட்டாங்க...

* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஏதும் இல்லை.  - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

* நீதிமன்ற உத்தரவை மீறி மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 6ம் தேதி  தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.

* ஒரு நாளைக்கு 69 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ளது. நாட்டின் ‘மன்கிபாத்’ என்ன என்பதை பிரதமர் புரிந்து கொண்டிருந்தால், இதுபோன்ற அவல நிலை இருந்திருக்காது. - காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

* ‘தேசமே முதலில், எப்போதும் முதலில்’ என்ற தாரக மந்திரத்தை வலியுறுத்தி, மகாத்மா காந்தி வழியில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்தியாவை ஒருங்கிணைப்போம். - பிரதமர் நரேந்திர மோடி.

Related Stories:

>