கர்நாடகா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை: பருப்பு விலை உயர வாய்ப்பு

விருதுநகர்: கர்நாடகா, மகாராஷ்டிராவில் பெய்யும் கனமழையால் பருப்பு விலை உயர வாய்ப்புள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2 வாரங்களுக்கு முன் பருப்பு, பயறு இறக்குமதிக்கு அனுமதி அளித்து, வணிகர்கள் இருப்பு வைக்க கட்டுப்பாடு விதித்தது. இதனால் உளுந்து, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு விலைகள் மூட்டைக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை விலை சரிந்தது. இந்த நிலையில் வணிகர்கள் இருப்பு வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு நீக்கியது. மேலும் கர்நாடகா, மகராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் உளுந்து, பாசிப்பயறு விளைச்சல் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது.

இதனால் வரும் வாரங்களில் பருப்பு, பயறு விலைகள் உயர வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். நடப்பு வாரத்தில் விற்பனை மந்தம் காரணமாக பருப்பு, பயறு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஏற்ற, இறக்கமின்றி கடந்த வார விலை நிலவரத்திலேயே விற்பனையாகிறது. விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்: உளுந்து (100 கிலோ) லயன் - ரூ.7,000, பர்மா உளுந்து பருவட்டு - ரூ.7,000, பர்மா பொடி - ரூ.6,300, உருட்டு உளுந்தம்பருப்பு லயன் - ரூ.10,300, உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா பருவட்டு - ரூ.9,800, உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா பொடி - ரூ.9,200, தொளி உளுந்தம்பருப்பு - ரூ.8,200.

தான்சானியா துவரை (100 கிலோ) - ரூ.6,300, லயன் துவரை - ரூ.6,800, துவரம்பருப்பு - ரூ.9,600, உடைப்பு துவரம்பருப்பு - ரூ.9,200. பர்மா பயறு - ரூ.6,500, அவியல் பாசிப்பயறு - ரூ.9,000, பாசிப்பருப்பு லயன் - ரூ.10,200, பாசிப்பருப்பு தஞ்சை - ரூ.9,000.

Related Stories: