பூச்சி நோய் தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

திருத்தணி: திருத்தணி அருகே திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் கிராமத்தில், வேளாண் துறை உதவி இயக்குனர் அனிதா உத்தரவின்படி, நெல், கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை தாக்கும் பூச்சி நோய் குறித்து ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை திட்டத்தின் கீழ் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி முகாமுக்கு வேளாண் அலுவலர் எழிலரசி தலைமை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் விசாலாட்சி பங்கேற்று பயிர்களை தாக்கும் நோய்கள் மற்றும் எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

திரூர் அறிவியல் கல்லூரி பேராசிரியர் விஜயசாந்தி, இணையதளம் மூலம் விவசாயிகளுக்கு நோய் தடுப்பு குறித்து அறிவுரை வழங்கினார். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு வேளாண் துறைசார்பில் கையேடுகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் வேளாண் உதவி அலுவலர் முனுசாமி, உதவி தொழில்நுட்ப அலுவலர், சரவணன், கிராம நிர்வாக அலுவலர் பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: