அயப்பாக்கத்தில் சட்டக்கல்லூரி மாணவரை வெட்டிய மூவர் சிக்கினர்

ஆவடி: அயப்பாக்கத்தில் சட்டக்கல்லூரி மாணவரை வெட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூரை அடுத்த பாடி, டிஎம்பி நகர், பெரியார் 5வது தெருவை சேர்ந்தவர் ஆரிஸ் (21). இவர், சட்டக்கல்லூரி மாணவர். கடந்த 22ம் தேதி இரவு ஆவடியை அடுத்த அயப்பாக்கம் அன்னை தெரசா பூங்கா அருகில் நின்று தோழிகளுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் ஆரிஸிடம் வீண்  தகராறு செய்ததுடன் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த ஆரிஸை, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில், அயப்பாக்கம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பன்னீர்செல்வம் (21), சண்முகவேல் (20), முரளி (21) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>