×

திருவில்லிபுத்தூர் அருகே சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் தற்போது அணில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, ராஜநாகம், புள்ளிமான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு சாம்பல்நிற அணில்கள் அதிகமாக இருப்பதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை தமிழக அரசு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என அறிவித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான சாம்பல் நிற அணில்கள் உள்ளன.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், இதற்கு முன் இல்லாத அளவுக்கு தற்போது இந்த பகுதியில் அதிக அளவு சாம்பல் நிற அணில்கள் அதிகரித்துள்ளன. ஆரம்பத்தில் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதியில் உள்ள மரங்களில் இருந்த சாம்பல் நிற அணில்கள், தற்போது தனியாருக்கு சொந்தமான தோட்டங்களிலும் அதிகம் வசித்து வருகின்றன. ஊரடங்கு நேரத்தில் ஆட்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அணில்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Thiruvilliputtur , Increase in the number of gray squirrels near Srivilliputhur
× RELATED திருவில்லிபுத்தூரில் நள்ளிரவில்...