வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து குவிப்பு; 5 ஆண்டுகளில் ரூ.6.11 கோடி சொத்து சேர்ப்பு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் குடும்பத்தாரர் மீது வழக்குப்பதிவு

சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 தேர்தல் வேட்புமனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளது. 2016. 2021-ம் ஆண்டு தேர்லில் வேட்புமனு தாக்கல் செய்த போது சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2016-ல் இருந்து 2021-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது வரவு செலவு கணக்குகளை போலீஸ் ஆய்வு செய்தனர். கடந்த வாரம் 22-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. 

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. பதவியில் இருந்த காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் டெண்டர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சொத்துக்கள் முறையாக வாங்கியுள்ளாரா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>