×

நாய்கள் கடித்து மான் சாவு

மரக்காணம்: மரக்காணம் அருகே குரும்புரம் பகுதியில் 750 ஏக்கர் பரப்பளவில் அபூர்வ மூலிகை வனம் உள்ளது. இந்த காட்டில் மான்கள், மயில்கள், முள்ளம் பன்றிகள், காட்டு ப்பன்றிகள் அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகளுக்கு காட்டுப்பகுதியில் தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் குடிநீர் தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வருகின்றபோது எதிர்பாராதவிதமாக வாகனங்களில் அடிபடுதல், சமூக விரோதிகளால் வேட்டையாடுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறுகின்றனர். 


இந்நிலையில் நேற்று காலை குரும்புரம் மூலிகை வனத்தில் இருந்து ஒரு புள்ளிமான் அருகில் இருந்த கிராமப்பகுதிக்கு வந்துள்ளது. அப்போது தெரு நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் தெரு நாய்களை துரத்திவிட்டு கடுகாயம் அடைந்த புள்ளிமானை மீட்டுள்ளனர். இதுகுறித்து இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நாய்கள் கடித்து குதறிய புள்ளிமானை சிகிச்சையளிக்க கால்நடை மருத்துவரிடம் எடுத்துச்சென்றனர். ஆனால் வழியிலேயே மான் பரிதாபமாக இறந்துவிட்டது.



Tags : Dogs, bites, deer, death
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...