×

79வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!!

டெல்லி: மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று  காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. பிரதமர் மோடியின் 79-வது மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும். இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : PM Modi , 79th 'Mann Ki Baat': Prime Minister Modi will address the nation at 11 am today .. !!
× RELATED பஞ்சாபில் இன்று காலை 11 மணிக்கு...