அமேசான் இணையதள வர்த்தகத்தில் ஒரு பொருளை கூட வாங்கியது இல்லை: பெசோசுடன் விண்வெளி சென்ற வாலிபர் கருத்து

நியூயார்க்: அமேசான் நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோஸ் கடந்த 20ம் தேதி, தனது புளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்த, நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் 7 நிமிடத்தில் விண்வெளிக்கு சென்று திரும்பினார். அப்போது, அவருடன் 18 வயது வாலிபர் ஆலிவர் டேமன் உட்பட 3 பேர் சென்றனர். இந்நிலையில், ஜெப் பெசோசுடன் விண்வெளிக்கு சென்ற டேமன் அளித்துள்ள பேட்டியில், ``பெசோஸ் உடனான பயணம் இனிய அனுபவமாக அமைந்தது. அவருடன் பயணித்த போது, `அமேசான் நிறுவனத்தில் இருந்து இதுவரை எந்த பொருளும் வாங்கியதில்லை’ என்று கூறினேன். ஆனால், அவர் இதனை மிக சாதாரணமாக எடுத்து கொண்டார்,’’ என்றார்.

Related Stories:

>