×

சென்னையில் கைது செய்யப்பட்ட களக்காடு வாலிபரின் வீட்டில் ஐஎன்ஏ அதிகாரிகள் சோதனை: மதுரை, தேனியிலும் அதிரடி

களக்காடு: சென்னையில் கைதான களக்காடு வாலிபரின் வீட்டில் ஐஎன்ஏ  அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் களக்காட்டை  சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சரவணக்குமார் என்ற அப்துல்லா (32).  மதுரை, புது ராமநாதபுரம் ரோடு விவேகானந்தர் தெருவில் வசித்து வந்த இவர், கடந்த பிப்.23 மற்றும் 25ம் தேதிகளில் முகநூலில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக மதுரை தெப்பக்குளம் போலீசார், ஏப்.10ம் தேதி வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு, தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த மே மாதம் சென்னையில் சரவணக்குமார் என்ற அப்துல்லாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து என்ஐஏ எஸ்பி ஜித் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட  அதிகாரிகள் குழுவினர் களக்காடு வந்தனர். இக்குழுவினர், நேற்று காலை சரவணக்குமார் என்ற அப்துல்லாவின் வீட்டில்  திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை 1 மணி நேரம் நீடித்தது. அவரது தாயார்  முத்துலெட்சுமி (61), சகோதரர் சேதுராமன் ஆகியோரிடமும் விசாரணை  மேற்கொண்டனர். அவரது நண்பர்கள் மற்றும் முக்கிய  பிரமுகர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோரை அழைத்து, அதிரடி விசாரணை  நடத்தினர்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த விசாரணை தொடர்ந்தது. இவர்களிடம் இருந்து முக்கிய தகவல்கள், ஆவணங்கள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் மதுரையில் உள்ள அப்துல்லா வீட்டிலும், தேனி மாவட்டம் சின்னமனூரிலும் என்ஐஏ சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் இவரது நண்பர்களின் செல்போன் கடை மற்றும் பிரியாணி கடைகளிலும் சோதனை நடந்தது.

Tags : INA ,Kalakadu ,Chennai ,Madurai ,Theni , Chennai, arrest, Kalakkadu youth, INA, officer, check
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...