சார்பட்டா பரம்பரை படத்துக்கு உதயநிதி பாராட்டு

ெசன்னை: ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்தக்காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தி இருப்பது சிறப்புக்குரியது. கபிலனாக அசத்தியுள்ள ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி, டான்ஸிங் ரோஸ் சபீர், வேம்புலி ஜான் கொக்கென், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கதையில் வாழச் செய்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்’ என்று பாராட்டியுள்ளார்.

Related Stories:

>