கவர்னர் பன்வாரிலாலுடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று பாஜ தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அவருக்கு பூங்கொத்து, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது பாஜ பொது செயலாளர் கே.டி.ராகவன், துணை தலைவர்கள் எம்.சக்ரவர்த்தி, எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி ஆகியோர் உடன் இருந்தனர். கவர்னருடன் அண்ணாமலை சந்தித்தது, மரியாதை நிமித்தமானது என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஒரு வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்கான குழு தலைவராக விவசாய அணி மாநில  தலைவர் ஜி.கே.நாகராஜ்,  குழு உறுப்பினர்களாக மாநில செயற்குழு உறுப்பினர்  என்.பி.பழனிச்சாமி, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், அறிவு  சார்பிரிவு மாவட்ட துணை தலைவர் ராமநாதன்,  விவசாய அணி மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கிருஷ்ணகுமார் இருப்பார்கள் ” என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மற்றொரு அறிக்கையில் அறிவித்துள்ளார்.

Related Stories:

>