தமாகாவிலிருந்து மேலும் ஒரு மாவட்ட தலைவர் விலகல்: ஜி.கே.வாசனுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்

சென்னை: தமாகாவிலிருந்து நிர்வாகிகள் பலர் வெளியேறுவதை தடுக்க தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்றார். இந்நிலையில், கோவையை சேர்ந்த தமாகா கொள்கை பரப்பு செயலாளர் குல்பி தங்கராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து, வேலூர் மத்திய மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி, தமாகாவிலிருந்து விலகுவதாக கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வேலூர் மத்திய மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி, கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘கடந்த 18 ஆண்டுகளாக தங்களின் கீழ் கட்சி பணியாற்றி வருகிறேன். இன்று வரை எனக்கு வழங்கப்பட்ட கட்சி பணிகளை என்னால் முடிந்த வரை செய்துள்ளேன். இனி வரும் காலங்களில், தாங்கள் வழங்கிய மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கட்சி பணி செய்ய எனக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>