தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளை வனத்துறை அமைச்சர் ஆய்வு

சென்னை: தமிழக வனத்துறை சார்பில் சாலையோரங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேப்போல், தேசிய நெடுஞ்சாலைகள் நடுவிலும், சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிதியில், தேசிய பசுமை திட்டத்தின் கீழ், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில், தாம்பரம் முதல் புழல் வரை சாலை ஓரங்களில் இருபுறங்களிலும், அதனை ஒட்டியுள்ள பார்சல் நிலங்களிலும் கடந்த 2019-20ம் ஆண்டு செங்கல்பட்டு வனச்சரகம் சார்பில் வேப்பமரம், வாகை, நாவல், அழிஞ்சில், புங்கம், மருது, தான்றி, வேங்கை, நெல்லி, ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட 300 வகையான 22 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றுக்கு தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் தண்ணீர் ஊற்றி, முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சாலையோரங்களில் என்னென்ன மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது, அவற்றிற்கு முறையாக கம்பி வேலிகள் அடைக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றப்படுகிறதா என நேற்று காலை ஆய்வு செய்தார். அதன்படி, தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் திடீர் ஆய்வு மேற்ெகாண்டனர். அப்போது செங்கல்பட்டு சமூக வனக்கோட்ட வன அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: