நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: தமிழச்சி எம்.பி, கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

விழுப்புரம்:நீட் தேர்வு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென்சென்னை), ரவிக்குமார் (விழுப்புரம்) பின்வருமாறு கேள்வி எழுப்பியிருந்தனர். கொரோனா பெருந்தொற்று, குறிப்பாக அதன் மூன்றாவது அலை குறித்த அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் அது போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய ஒன்றிய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை  எழுப்பியிருந்தனர்.  அதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது:-

 நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. நீட்- (பிஜி), நீட்- (யுஜி) 2021 தேர்வுகள் முறையே 11 செப்டம்பர், 2021 மற்றும் 12 செப்டம்பர், 2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கென தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களுக்கு பின்வரும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியலுக்கான தேர்வுகளை பல்கலைக்கழகங்கள், மாநில அரசுகளே நடத்துகின்றன. இவ்வாறு அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>