குமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு தொங்கு பாலம் அமைக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி,  விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின்  பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை  அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர்கள்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா  ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு 5 மாவட்டங்களின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.  பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்பவர்கள் அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கு மீண்டும் கடலில் படகு பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையை தவிர்க்க விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு 140 மீட்டர் தூரத்துக்கு தொங்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் விவேகானந்தர் பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் நேரடியாக திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.37 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டரும் விடப்பட்டுள்ளது.  இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: