கள்ள ஓட்டு போடுவதை இரும்பு கரத்தால் ஒடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி:  ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்குச்சாவடி ஒன்றில் நடந்த கலவரம் தொடர்பாக தண்டனை பெற்ற ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வாக்காளர்கள் சுதந்திரமாக தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை உறுதி செய்வதே தேர்தல் முறையின் சாரம்சம். நேரடித் தேர்தல்கள் நடைபெறும் ஜனநாயக நாடுகளில் வாக்காளர் தனது வாக்கை அச்சமின்றி செலுத்துவதை உறுதிசெய்வது முக்கியம்.

ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்களிக்கும் ரகசியம் அவசியம். இந்த ரகசியம் வெளிப்பட்டால், வாக்காளர் பாதிக்கப்படலாம். சுதந்திரமான,  நியாயமான தேர்தல்களுக்கான உரிமையை நீர்த்துப்போக யாரையும் அனுமதிக்க முடியாது. எனவே, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் அல்லது கள்ள ஓட்டு போடும் எந்தவொரு முயற்சியையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: