திருவாரூர் பல்கலைக் கழகம் உட்பட 12 ஒன்றிய பல்கலை.களுக்கு துணை வேந்தர்கள் நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் செயல்படும் ஒன்றிய பல்கலைக் கழகங்களில் 22 துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றில் 12 பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார். தெற்கு பீகாரில் கயா ஒன்றிய பல்கலைக் கழகம், மணிப்பூர், மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக் கழகம், வடகிழக்கு மாநில பல்கலைக் கழகம், குரு காசிதாஸ் பல்கலைக் கழகம், பிலாஸ்பூர் ஒன்றிய பல்கலைக் கழகங்களுக்கும் புதிய துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

தமிழ்நாடு திருவாரூரில் உள்ள ஒன்றிய பல்கலைக் கழகத்துக்கு முத்துகலிங்கன் கிருஷ்ணன் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா-தன்கேஸ்வர் குமார், இமாச்சல்-பிரகாஷ் பன்சால், ஜம்மு - சஞ்சீவ் ஜெயின், ஜார்கண்ட்- கிஷிடிஜ் பூஷன் தாஸ்,  கர்நாடகா- பட்டு சத்யநாராயணா, ஐதராபாத்-பசுத்கார் ஜே ராவ் ஆகியோர் துணை வேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: