காவலர் உடல்தகுதி தேர்வு கொரோனா பரிசோதனை அவசியம்: எஸ்பி அறிவிப்பு

காஞ்சிபுரம்: காவலர் உடல்தகுதி தேர்வில் கொரோனா பரிசோதனை அவசியம் என காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 2020ம் ஆண்டுக்கான தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 3028 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு வரும் 26ம்தேதி தேதி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த உடல் திறன் தகுதி தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள், தங்களது அனுமதி நுழைவு சீட்டில் குறிப்பிட்ட அழைப்பு நாட்களுக்கு 4 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை கட்டாயம் தேர்வு நாளில் எடுத்து வர வேண்டும். அதன் அடிப்படையில் மட்டுமே உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.  மேலும் தேர்வர்கள் தங்களது நுழைவு சீட்டினை www.tnusrbonline.org எனும் வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளளது.

Related Stories: