×

பிளஸ் 2 துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான துணைத் தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடக்கிறது.  தேர்வுகள் வழக்கம் போல காலை 10 மணிக்கு தொடங்கும். விடைத்தாளில் குறிப்புகள் எழுத 5 நிமிடம், கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடியும்.



Tags : Release of Plus 2 Sub-Examination Schedule
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...