தங்கம் விலை சவரனுக்கு 168 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை ஒரு மாதத்துக்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 21ம் தேதி கிராமுக்கு 14 குறைந்து ஒரு கிராம் 4,530க்கும், சவரனுக்கு 112 குறைந்து ஒரு சவரன் 36,240க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. கிராமுக்கு 30 குறைந்து ஒரு கிராம் 4,500க்கும், சவரனுக்கு 240 குறைந்து ஒரு சவரன் 36,000க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 4,490க்கும், சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் 35,920க்கும் விற்கப்பட்டது.

2 நாட்களில் மட்டும் சவரன் 432 அளவுக்கு குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே நேரத்தில் சவரன் 36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. தங்கம் விலை குறைந்து வந்த மகிழ்ச்சி 2 நாட்கள் தான் நீடித்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு 21 அதிகரித்து ஒரு கிராம் 4,511க்கும், சவரனுக்கு 168 அதிகரித்து ஒரு சவரன் 36,088க்கும் விற்கப்பட்டது.

Related Stories:

>