உரிய வாரன்ட் இல்லாமல் அரசு பேருந்துகளில் போலீசார் இலவசமாக பயணிக்க கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை

சென்னை: உரிய வாரன்ட் இல்லாமல் போலீசார் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கூடாது, என்று காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஒரு வழக்கில் போலீசார் பேருந்தில் கட்டணம் எடுக்காமல் சென்றபோது, பேருந்து நடத்துனர் மற்றும் காவலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், போலீசார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உரிய வாரண்ட் இல்லால் பயணம் செய்ய கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்று தெரிவித்திருந்தது. எனவே, அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் கருத்தை உறுதி செய்ய வேண்டும். உரிய வாரண்ட் இல்லாமல் போலீசார் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கூடாது.

Related Stories: