×

சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

ஆவடி: அம்பத்தூர் அடுத்த பாடி, டிஎம்பி நகர், பெரியார் 5வது தெருவை சேர்ந்தவர் ஆரிஸ் (21). சட்டக்கல்லூரி மாணவர். நேற்று முன்தினம் இரவு ஆரிஸ், ஆவடி அடுத்த அய்யபாக்கம், அன்னை தெரசா பூங்கா அருகில் நின்று கொண்டு, தனது தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள், ஆரிஸிடம் வீண் தகராறு செய்தனர். இதில், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஆரிசை சரமாரியாக வெட்டினர். இதில், அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து 3 பேர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.படுகாயமடைந்த ஆரிஸ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின்படி திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து, 3 பேரை தேடி வருகிறார்.= ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், தென்றல் நகர் மெயின் ரோட்டில் ஒரு தம்பதி வசிக்கின்றனர் இவர்களுக்கு 17 வயதில் மகள் இருக்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜோதி (24).கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற ஜோதி, சிறுமியை பலாத்காரம் செய்தார். கடந்த சில தினங்களுக்கு உடல்நிலை பாதித்தது. இதையடுத்து பெற்றோர், சிறுமியை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் லதா, போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஜோதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

புழல்: செங்குன்றம் போலீசார், நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனைச்சாவடியில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அசுர வேகத்தில் வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். காரின் பின்புறம் 120 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அதனையடுத்து, காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரித்தனர்.அதில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் அப்பிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பாண்டியன் (34), சதீஷ்குமார்(38). தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் கஞ்சா வாங்கி வரும்படி கூறியுள்ளார். அதன்படி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கஞ்சா வாங்கி, காரில் கடத்தி வந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார், முக்கிய குற்றவாளியான ஈஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் எருமைவெட்டி பாளையம் கொசஸ்தலை ஆற்றில் இரவு நேரங்களில், லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில், பலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, நேற்று அதிகாலையில் போலீசார், அங்கு சென்று, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிலர், மணல் திருடி டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்கள், போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து தப்பிவிட்டனர். இதையடுத்து போலீசார், டிராக்டரை மணலுடன் காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.



Tags : Sickle cut for law student
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...