வெ.இண்டீஸ்-ஆஸ்திரேலியா 2வது ஒன்டே டாஸ் போட்ட சில நிமிடத்தில் ஆட்டம் ரத்து: ஊழியருக்கு கொரோனா தொற்றால் அதிரடி

பிரிட்ஜ்டவுன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரை 4-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா  133  ரன் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றது.  2வது போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் தொடங்க இருந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலெக்ஸ் கேரி பேட்டிங்கை தேர்வு செய்தார்.  இந்நிலையில் ஆட்டம் தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் கொரோனா தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  

வெஸ்ட் இண்டீஸ் அணி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் இரு அணி வீரர்களும் உடனடியாக மைதானத்தில் இருந்து ஓட்டலுக்கு திரும்பினர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பிறகு போட்டி மற்றொரு நாளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>