டெல்லியில் பட்டாசு வெடிக்கத்தடை: பசுமை தீர்ப்பாயத் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா காலத்தில் டெல்லியில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது சரியே என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது சரியே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

காற்று மாசு குறைவாக இருந்தால் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிப்பார்கள். பட்டாசு தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு மேலும் விளக்கம் தர தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துவிடவில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முன்னதாக கொரோனா அச்சம் உள்ள சூழலில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைக்கு கொரோனா காலத்தில் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Related Stories:

>