சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சலுகைகள் அறிவித்து அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சலுகைகள் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்கக்கூடிய நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாக தொடர்ச்சியாக அரசுக்கு அறிவுறுத்தி வந்த நிலையில் சிறு.குறு தொழில் நிறுவனங்களின் பாதிப்பை சரிசெய்யும் வழியிலும் பல்வேறு தளர்வுகளை மற்றும் சலுகைகளை தமிழக அரசு அறிவித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய நிறுவனங்களில் 20 லட்சத்திற்கு குறைவான டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்பதற்கு ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த விதிமுறைகளில் தளர்வுகள் அளித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும், டெண்டர் பெறக்கூடிய புதிதாக தொழில் தொடங்கக்கூடிய நிறுவனங்கள் இந்த சலுகைகளை பெற வேண்டும் என்பதற்காகவே இது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்வைப்பு தொகை வைக்க தேவையில்லை என்றும், வருடத்திற்கு குறிப்பிட்ட தொகையாக turnover செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அரசு டெண்டரில் பங்கேற்கக்கூடிய நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை எனவும், டெண்டருக்கான தொகை கட்டத்தேவையில்லை என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் startuptn, startuptamilnadu முகமையில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: