பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டம்: காங்கிரஸ் எம்.பிக்களும் பங்கேற்பு

டெல்லி: பெகாசஸ் செயலி மூலம் தலைவர்களின் தொலைபேசியில் கேட்பு விவகாரத்திற்கான கண்டன குரல்கள் வலுத்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்களும் இணைந்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திமுகவை சார்ந்த எம்.பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, கனிமொழி, மேலும் வைகோ உள்ளிட்ட ஏராளமான எம்.பிக்களும் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டது என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை பொறுத்தவரையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து தொடங்கி நடைபெற்று கொண்டுள்ளது. அன்றைய தினத்தில் இருந்தே இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி கொண்டுள்ளனர். எதிர்க்கட்சி எம்.பிக்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். அரசே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. சட்டவிரோதமானது. ஏர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் விதமாக உள்ளது என்று கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்திலும் இந்த பபிரச்சனையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>