சொல்லிட்டாங்க...

கிரீமிலேயர் வருமான வரம்பை கணக்கிடுவதில் விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருவாயை சேர்க்க கூடாது. கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக ஒன்றிய அரசு உயர்த்த வேண்டும்.   :- பாமக நிறுவனர் ராமதாஸ்

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் கல்வி கடன், வேலைவாய்ப்புகள், திட்டங்கள் செயல்படுத்துதல் போன்ற எந்த பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.     :- சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழர்கள் உள்பட ஒட்டுமொத்த இந்திய வீரர், வீராங்கனைகள் தாய் நாட்டின் விளையாட்டு திறமையை, புகழை உலக அளவில் நிலைநாட்டும் வகையில் விளையாட வேண்டும்.    :- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

திருவனந்தபுரம் கோட்டத்தின் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் ரயில்வே பணி இடங்களுக்கான தேர்ைவ தமிழக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும்.    :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories:

>