தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் ரூ.320 குறைந்தது: சவரன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் விற்பனை

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைந்தது. சவரன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.36,480க்கும், 17ம் தேதி சவரன் ரூ.144 குறைந்து ஒரு சவரன் ரூ.36,336க்கும் விற்கப்பட்டது. 19ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.36,272க்கு விற்கப்பட்டது. 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.328 அளவுக்கு குறைந்தது. கடந்த 20ம் தேதி கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,544க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,352க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ரூ.4,530க்கும், சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு சவரன் ரூ.36,240க்கு விற்கப்பட்டது.

நேற்று காலை தங்கம் விலையில் அதிரடி சரிவு காணப்பட்டது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.4,500க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.4,490க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.35,920க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவரன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது நகை வாங்குவோருக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: