×

மின்வாரியம் சார்பில் தீவிர பராமரிப்பு பணி

திருவொற்றியூர்: பொதுமக்களுக்கு தங்கு தடை இல்லாமல் மின்சாரம் வழங்கவும், மழைகாலத்தில் பொதுமக்களுக்கு மின் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை மின் பகிர்மான வட்டம், வடக்கு திட்டத்தின் சார்பாக வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, பொன்னேரி கோட்டங்களில் மின் கூட்டு பராமரிப்பு பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் தலைமையில்  300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரை பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணியை மேற்கொண்டனர்.  இதில் சுமார் 189 பழுதடைந்த மின்கம்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதை மாற்றியதோடு, 40 இடங்களில் தாழ்வாக இருந்த மின் கம்பிகள் சரி செய்யப்பட்டு மரக் கிளைகளும் அகற்றப்பட்டன.

Tags : Electricity Board , Electricity, maintenance work, precautionary measures
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி