×

சில்லி பாயின்ட்...

* 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* சிலி டேக்வாண்டோ வீரர் பெர்னாண்டா ஆகுயர், நெதர்லாந்தின் கேண்டி ஜேகப்ஸ் (ஸ்கேட்போர்டிங்), செக் குடியரசு டேபிள் டென்னிஸ் வீரர் பவெல் சிருசெக் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
* டோக்கியோ ஒலிம்பிக்சில் இங்கிலாந்து சார்பில் 376 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடக்க விழா அணிவகுப்பில் 30 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
* 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிசுடுதல் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற நேற்று வெறும் 20 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
* கவுன்டி லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் முதல் இன்னிங்சில் 311 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கே.எல்.ராகுல் 101*, ஜடேஜா 75, அகர்வால் 28, விஹாரி 24, புஜாரா 21, ஷர்துல் 20 ரன் எடுத்தனர். கவுன்டி பந்துவீச்சில் மைல்ஸ் 4, லிண்ட, பேட்டர்சன் தலா 2, கார்சன் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய கவுன்டி அணி தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்திருந்தது.

Tags : Roulette Point ...
× RELATED சில்லி பாயின்ட்...