திமிங்கலம் விழுங்கிய மனிதன்

திமிங்கலம் விழுங்கிய மனிதன் ஒருவர் அதன் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்த சாகசக் கதைகளை காமிக்ஸ் முதல் புனித நூல்கள் வரை பலவற்றிலும் வாசித்திருப்போம். அப்படியான சம்பவம் ஒன்று சமீபத்தில் நிஜமாகவே நடந்துள்ளது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக்கேல் பக்கார்ட் என்ற மீனவர். இவர் சிங்கிறால் எனப்படும் ஒருவகை இறாலைப் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற போது கூன்முதுகுத் திமிங்கலம் எனப்படும் பலீன் வகைத் திமிங்கலம் ஒன்று இவரை விழுங்கியது. விழுங்கிய முப்பது நாற்பது விநாடிகளில் திமிங்கலமே இவரை துப்பி

விட்டது. பெரிய காயங்கள் எலும்பு  முறிவு கள் எதுவும் இல்லை என்றாலும் உடனடி யாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட மைக்கேல் தற்போது நலமாக உள்ளார். பொதுவாக, பலீன் வகைத் திமிங்கலங்கள் வாயில் பற்கள் இருக்காது. பலீன் தகடு போன்ற அமைப்பே இருக்கும். இவை கடலுக்குள் கேலன் கணக்கில் தண்ணீரை விழுங்கும்போது அதில் இருக்கும் சிறு மீன்கள், கடல் உயிரிகளை சல்லடை போன்ற அந்த பலீன் தகடுகள் வடிகட்டி இறையாகப் பிடித்துக்கொள்ளும். தண்ணீர் வெளியேறிவிடும். இவற்றின் குடல் அமைப்பு நம் முஷ்டி அளவே இருக்கும் என்பதால் மனிதர்களை இவற்றால் விழுங்க முடியாது. பலீன் திமிங்கலங்கள் தண்ணீரை விழுங்கும்போது அவை எதிரில் இருப்பதை பார்ப்பதில்லை என்பதால் சமயங் களில் இப்படி பெரிய உயிர்களை தெரியாமல் விழுங்கிவிடுகின்றன. உடனடியாக அப்படி விழுங்கியதைத் துப்பியும் விடுகின்றன.

Related Stories:

More
>