ஆடுகளை பராமரிக்காத பண்ணையாருக்கு சிறை!

இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். நியூசிலாந்தின் தெற்குத் தீவுப் பகுதியில் உள்ள ரசோக் க்ரீக்கை சேர்ந்தவர் பீவன் ஸ்காட் டெய்ட். இவர் ஒரு காலநடைப் பண்ணை வைத்திருக்கிறார். இரு ஆண்டுகளுக்கு முன்பு இவர் பண்ணை குறித்து புகார் வரவே விலங்குகள் நல ஆணையத்தின் ஆய்வாளர் பரிசோதனை செய்திருக்கிறார். அங்கு பல ஆடுகள் ஆங்காங்கே இறந்து கிடக்க எஞ்சியவை நோஞ்சனாய், ஊட்டச்சத்தின்றி இறக்கும் நிலையில் குற்றுயிரும் குலையுருமாய் வாடிக் கிடந்திருக்கின்றன. அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர் பீவனிடம் கேட்டதற்கு முறையான விளக்கம் கிடைக்கவில்லை. நியூசிலாந்து அரசின் விலங்குகள் நல அமைச்சகம் இவர் மீது வழக்குத் தொடர்ந்தது. இவர் பண்ணையில் இருந்த 226 ஆடுகளைக் காப்பாற்ற இயலாது என்பதால் அவற்றை கருணைக் கொலை செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும், எஞ்சிய பிற விலங்குகள் வேறு பண்ணைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வந்துள்ளது. இதில், பீவனை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் கட்டாய சமூக உழைப்பு முகாமில் பாடுபட வேண்டும் என்றும் நான்கு ஆண்டுகளுக்கு அவரது பண்ணைக்கான உரிமம் ரத்து செய்யப்

படுகிறது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: