மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் எடுக்கப் போறீங்களா?!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertising
Advertising

வழிகாட்டி

நாளொரு மேனியும், பொழுதொரு நோயுமாக வந்துகொண்டிருப்பதால் இனி காப்பீடு என்பது அத்தியாவசியமாகிவிடும்போல்தான் தெரிகிறது. அப்படி தனியார் மருத்துவ காப்பீடு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்...

* குடும்ப நலனுக்காக மருத்துவ காப்பீட்டில் சேரும்போது, உங்களுடைய மரபு சார்ந்த நோய்களை கவனத்தில் கொண்டு சேர்வது நல்லது.

* காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த பிறகு எப்போதிலிருந்து பாலிசி நடைமுறைக்கு வரும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சிகிச்சை அளிக்கப்படும் நோய்கள் விவரமும், மருத்துவமனை விவரமும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமான விஷயங்கள்.

* மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்ட பிறகு மீண்டும் Restoration Benefit முறையிலான திட்டங்கள் உண்டு. Restoration Benefit என்பது குறிப்பிட்ட தொகைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து, அந்த ஆண்டிலேயே சிகிச்சை பெற்றிருந்தாலும் மீண்டும் அதே தொகைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வசதி கொண்டது. அடிக்கடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள் இந்த Restoration Benefit திட்டத்தில் சேர்ந்து பலன் பெறலாம்.

* உடனடியாக பலன் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கான சிறப்பு திட்டங்களும் மருத்துவ காப்பீட்டில் உள்ளது.

* மொபைலுக்கு டாப் அப் செய்துகொள்வது போல இன்ஸ்யூரன்ஸ் திட்டத்திலும் வழி வகைகள் உண்டு. 4 லட்ச ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்து, அந்த தொகைக்கு மேல் செலவு செய்துவிட்டால் இந்த Top-Up insurance கை கொடுக்கும்.  

* ‘இந்த நோய்க்கு, இவ்வளவுதான்’ என்ற கணக்கு காப்பீட்டு திட்டத்தில் இருக்கிறது. அதனால், நோய்களுக்கேற்ற பாலிசியா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

* மருத்துவ சிகிச்சைகளை செய்துவிட்டு, அதன்பிறகு காப்பீட்டு தொகைக்காக சிலர் காத்திருப்பார்கள். இதைவிட, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த உடனே காப்பீட்டு நிறுவனமே செலவுகளை செய்யும் வகையிலான திட்டங்களும் உண்டு. எனவே, காப்பீட்டுத் திட்டத்தில் இரண்டாவது முறையே சிறந்தது.

                                

- வெங்கடேஷ்

Related Stories: